நிலாக்கிண்ணம் - கவிதைகள்

நிலாக்கிண்ணம் - கவிதைகள்/பாடல்கள் இலவு காத்து நிற்பதுவோ? சிந்தனையை சில் வண்டாய் மொய்க்கின்ற வரிகள் சிந்தாமல் சிதறாமல் அள்ளிடுமோ கரங்கள் பாராமல் பார்க்கின்ற பங்கயம் போல் விழிகள் பதறாமல் ஏந்திடவே துடிக்கின்ற விரல்கள் பாலாற்றில் தேன் பொழியும் பார்வையதன் தவிப்பில் பகல்நேரக் கனவாகக் கழிகின்ற கணங்கள் பனி வாடைக் காற்றதனின் குளிர்கூடக் கனலும் பாதைமர நிழல்கூடத் தணலாக தகிக்கும் முன் பனியில் முற்றத்து முல்லைப்பூ மணமும் முள்ளாக மனம்தைத்து மூச்சில்விஷம் ஏற்றும் இத்தனை நாள் காத்திருந்து இன்பம் எல்லாம் இழந்தும் இன்னும் ஓர் வேனல்மழைக் கேனோமன ஏக்கம் இலவு காத்து நிற்பதிலே இன்னும் ஏன் மோகம் இல்லாத வழிதேடிச் செல்லுவதோ விவேகம் கி.பாலாஜி 21.11.2021 இரவு 10.30 கண்ணோடு கண் பேசும் காதல் கதை கண்ணோடு கண் பேசும் காதல் கதை - கண்ணில் விண்மீன்கள் பாய்ச்சும் மின்சாரக் கதை எண்ணத்தில் உருவான வண்ணத் தினை எதிர்பாராமல் எனைச் சேர்ந்த இன்பச் சுனை (கண்ணோடு) மான் போன்ற விழியொன்று மொழி பேசுதே மனம் போகும் போக்கேனோ தடுமாறுதே தினம் காணும் காட்சிக்கின் றொளி கூடுதே திசையெங்கும் வண்ணங்கள் விளையாடுதே (கண்ணோடு) கருமேகம் கூட, கான்மயில் ஆடுதே காற்றோடு மல்லிப்பூ மணம் வீசுதே 'பூவுக்குள் பூகம்பம்' உண்டானதே புதிதான சுகமொன்று உருவானதே (கண்ணோடு) உயிர் வாழ்ந்த தேயிந்தக் கணம் காணவே உள்ளத்தில் உல்லாச அலைவீசுதே உயிரில் நீ தேனூற்றி இனிப்பேற்றினை உருவான கவிதைக்கு இசை கூட்டினை (கண்ணோடு) கி.பாலாஜி 25.11.2021 12.30 am நடந்தாய் வாழிநீ நதியே ! கனவுகள் புரியாத காலம் நினைவுகள் பூக்காத நேரம் வனமாய் அடர்ந்த இருளில் மனதில் நிலவொளிக் கீற்று ! மின்மினிப் பூச்சியின் ஒளியாய் மின்னியென் னுள்ளே நுழைந்தாய் இன்னதாம் எனநான் அறியும் முன்னமே மாயமாய் மறைந்தாய் ! அன்னநின் வரவு தந்தொளியை அக்கணம் முதல் நான் இறுக்கிப் பிடித்ததோர் பிடிவிட வில்லை - ஒளி வந்ததோ ரிடமறிய வில்லை ! நினைவிலே இடறிய நிலவாய் உறவிலே உன்னத உறவாய் மனதிலே நீங்கா இடமாய் மறையிலே ஒலியென நிலைத்தாய் ! எட்டியும் எட்டாப் பிடியில் அட்டையாய் மனதில் ஒட்டிக் கட்டுக்குள் ளடங்கா நதியாய் காவிரிப் பெருக்காய் நடந்தாய் நடந்தாய் வாழிநீ நதியே நலமாய் பெருகுநீ கதியே நிலத்துள் ஊன்றிய விதையே விழுதுகள் நிலைத்த வழியே ! உன்னடி தொழுதே தொடர்வேன் ஊன்றிய விதையாய் முளைப்பேன் உதவிடக் கரம்நான் கொடுப்பேன் ! உன்வழி நானும் நடப்பேன் ! உன்வழி நானும் நடப்பேன்! கி .பாலாஜி 25.11.2020 இசையாய் பொழிகின்ற காலம்... ஒவ்வொரு துளியாய் என்னுள் உருவாகி வந்த ஸ்வரமே உன்னருள் முழுதும் இசையாய் பொழிகின்ற காலம் வருமோ? (ஒவ்வொரு) கண்களை மூடிக் காலம் காலமாய் தவம் செய்தேன் கண்ணிமை திறக்கும் நொடியில் மின்னலாய் வந்தாய் சென்றாய் காரிருள் காட்டில் நானும் கலங்கினேன் மேலும் நடந்தேன் வானில் ஓர் கீற்றாய் வந்த சுவடின்றி மறைந்ததேனோ? (ஒவ்வொரு) உன்னருள் முழுதும் இசையாய் பொழிகின்ற காலம் வருமே உன்னருள் முழுதும் இசையாய் பொழிகின்ற காலம் வருமே புலன்களோ மனதின் பிடியில் புவனமே உந்தன் மடியில் கதிரென நீயும் அங்கே காண்கிறாய் எந்தன் நெஞ்சில் இருளென் பதேயினி இல்லை இனி எல்லாம் இசை வேறில்லை வருவது முழுதும் வசந்தம் வரங்களால் வளரும் ப்ரபஞ்சம் உன்னருள் முழுதும் இசையாய் பொழிகின்ற காலம் வருமே கி.பாலாஜி 10.12.2020 இரவு 11மணி மலரே........ மலரே பனியின் துளியில் சிலிர்த்த கதிரே கனவின் அழகில் லயித்த மனமே கனலாய் கனிந்த கனியே அலையே கடலாய் விரிந்த அழகே. (மலரே) வெயிலும் ஒரு நிழலாய் மாறும் வேனலிலும் மேகம் பாடும் கார் காலத்து மின்னல் ஒளியாய் உன் கண் இமைகள் படபடத்தாலே! (மலரே) சிறகுகள் விரித்தங்கு சிந்தனைப் பறவை சீதள மாமொரு மார்கழிப் பூவின் மங்கிய வண்ணச் செவ்விதழ் மேலே மயங்கி உரசியே மனம் களித்தாடும் (மலரே) சித்திரச் சிலையெனச் சேர்ந்திசை பாடும் நித்திரை மறந்தே நின் வசமாகும் நிலவே மயங்கிக் குளிரில் உறையும் நினைவோ காலம் கடந்தே பறக்கும் (மலரே) கி.பாலாஜி 22.12.2020 இரவு 11.30 நலமே சேரும் பேதம் இல்லா ஸ்ருதியுடனே வேதம் வரிகளை இசைக்கிறது வாதம் செய்யும் மனம் இன்று வாகாய் இசையில் லயிக்கிறது மலையைப் பார்த்து மடு ஒன்று மனதில் வலிமை கொள்கிறது மாறும் கணக்குகள் எல்லாமே மனதுக்கு அழகாய் புரிகிறது எங்கே செல்வோம் ஏன் வந்தோம் என்பது புரிந்தே பயனில்லை முன்னில் விரிந்த பாதையிலே சென்றால் துயர்கள் இனி இல்லை நம்புவ தொன்றே நாமறிவோம் நலமே சேரும் முன்செல்வோம் சுமைகள் எல்லாம் சுகமாகும் இமைகள் கனப்பதும் வரமாகும் கி.பாலாஜி 28.11.2020 திங்கள் இரவு 7.30 இதய தாகம் ராகம்: சிவரஞ்சனி இதயம் முழுதும் வசந்த மழையில் நனைந்த பின்னாலும் தாகம்... நனைந்த பின்னாலும் தாகம்... (இதயம்) அன்பின் வெள்ளம் உருண்டு புரண்டென் உள்ளில் பொழிந்து வழிந்தே.. சென்ற பின் னாலும் ஏக்கம்... சென்ற பின்னாலும் ஏக்கம்.. (இதயம்) ஒன்றுமில்லாமல் வரண்டதோர் காலம் இருந்ததை நீ யறி வாயோ இதயம் வெந்ததை நீ யறிவாயோ ... திடுமெனத் தோன்றி அளவின்றிப் பொழிந்தால் போதுமென்றோ சொல்லத் தோன்றும் - இது போதும் என்றோ சொல்லத் தோன்றும் (இதயம்) பொழிகின்ற வரையில் பொழிந்தே தீர்த்திடென் மோகங்கள் மாய்ந்தே போகும் அதன் வேகங்கள் அழிந்தே போகும் வடிகின்ற வெள்ளம் வடிந்தே போகும் மீண்டும் வேனல் காலம் ! சக்கரம் என்பது சுழன்றே தீரும் முடிவே தொடக்கம் ஆகும் - அது மறுபடி முடிவினில் தொடங்கும் (இதயம்) கி.பாலாஜி 11.11.2019 இரவு 11.30 இசை தேவதை காதில் பொழியும் கான மழையே கண்கள் எழுதும் கவிதை வரியே மேகரதத்தில் பாயும் கீற்றே மின்னொளி யேநெஞ்சில் கங்கை ஊற்றே வேனல் சூட்டில் வேம்பின் நிழலே வெப்பம் தணிக்கும் தென்றல் காற்றே காவிய வரிகள் பாட முனைந்தேன் ஓவியமே இசை தேவதை யேவா பாலை வனத்தில் பாதம் நடக்கும் போதும் உந்தன் நினைவே துளிர்க்கும் கானல் நீரும் சோலை மரமாய் காட்சி அளிக்கும் உள்ளம் களிக்கும் காலைநேரக் கன்னிக்கதிர் உனைக் கண்டே இந்தக் கமலம் மலரும் வாழ்வில் என்றும் வற்றாச் சுனையாய் ஊறும் தேனே உள்நின் றொளிர்வாய் கி.பாலாஜி 13.11.2020 விடியல் நேரம் 3 மணி உள்ளே ஒலிக்கும் நம்பிக்கை காலடி ஓசையில் கண்பதித் தேநான் காத்திருந் தேன்பல நாளாய் வசந்தத்தின் பாதையில் மழைத்துளி தேடி சாதகப் பறவையைப் போலே (காலடி) வீசிய கதிரொளிச் சூட்டில் கரைந்திட்ட பனித்துளிக் கனவறி வாயோ வீசும் தென்றலின் குளிர்ச்சியில் வியர்க்கும் பூக்களின் குறைஅறி வாயோ (காலடி) ஆர்க்கும் அலைகளின் ஓசையில் உறங்கும் ஆயிரம் கதையறி வாயோ போர்க்களம் காணாப் படைக்கலம் போலே புழுங்கும் மனமறி வாயோ (காலடி) உறங்கா மனத்தின் ஒவ்வோ ரசைவும் உன்வர வைநோக்கி நிற்கும் புலரா இரவும் புலரும் என்றொரு புண்ணியக் கணம் வேண்டிக் காக்கும் (காலடி) ஆலயமணியின் ஓசையில் எழும்பும் நாதத்தின் அதிர்வலை எனவே உள்ளே ஒலிக்கும் நம்பிக்கை எனும் ஓரொலி தனைப்பற்றி வாழ்வேன் (காலடி) கி.பாலாஜி 29.12.2020 இரவு 9 மணி அன்னையும் தந்தையும் தானே.,.... உருவாக்கி உயிர் தந்த தாயே உனக்காக நான் என்ன செய்தேன் உள்ளுக்குள் உருகினாய் நீயே இன்று உன்னுருவம் என் நெஞ்சில் சுமந்தேன் கழிக்கின்ற கணங்களொவ் வொன்றும் பெற்றோர் கருணையின் பிச்சையா மன்றோ ! கடந்து வந்த காலங்கள் எல்லாம் படங்களாய் முன்னில்நின் றனவே ! தள்ளாத வயதிலும் கூட அன்பைத் தள்ளாமல் தந்தையும் தந்தார் உம்வழியி லிருந்தவை முள்ளே அந்த உண்மைகள் நானறிய வில்லை! நீர்செய்த செயல்களில் எல்லாம் உள்ள குறை மட்டும் என்கண்ணில் படுமே! என் குறையை மகன் காணும்போதே உம்நிறையை நான் அறிய நின்றேன்! அன்பென்ற ஊன்றுகோல் தன்னை - உம் அன்பான செயல் மூலம் தந்தீர் ! என்புருகி நீர்தேய்ந்த போது - என்னை அறியாமல் நான் நொந்ததுண்டோ? இருக்கின்ற காலங்கள் வரையில் இருப்பின் அருமைகள் அறியா திருப்போம்! இல்லாத காலத்தில் வெறுமை என்னும் வேக்காட்டில் துன்புற்று வாழ்வோம் ! அன்னையும் தந்தையும் மட்டும் வாழ்வில் அழியாத செல்வங்கள் உணர்வோம் ! உருவாக்கி உயிர் தந்த தெய்வம் உள்ள காலத்தி லேயேம திப்போம் ! இகவாழ்வு எத்தனை காலம் என் றெவருமே அறிந்திட மாட்டோம் ! இகசுகம் அளித்திட்ட பெற்றோர் நமக் கினியதோர் நிதியாவ ருணர்வோம்! --கி.பாலாஜி 07.01.2021 மாலை 5.30 பொன்னொளிர் வதனம் புன்சிரிப் பாலிந்தப் பூவிதழ் மென்மை போதவிழ் மலராய் மணம்பரப்பி டுதே பாலின் வெண்மை போலுந்தன் மனமே பாவை உந்தன் பார்வை இனிமை (புன்சிரிப்பால்) கண்ணிமை மூடிக் கனவுல கில்நான் காலமும் உன்னுடன் கழிப்பேன் கண்ணே உந்தன் பொன்னிதழ் மொழியும் சொல்லுக்கு விலைதான் உண்டோ (புன்சிரிப்பால்) மாலையில் மலரும் அல்லியின் மணமாய் மனதில் நிறையும் மங்கலமே மாலைப் பொழுதின் மஞ்சள் கதிராய் மனதுள் புகுந்தாய் மந்திரமே (புன்சிரிப்பால்) கண்கள் காணும் காட்சிகள் எல்லாம் காவிய வரியாய் கவியாய் மலரும் காரணம் உந்தன் பொன்னொளிர் வதனம் கண்முன்னி லென்றும் நிற்பத னாலோ (புன்சிரிப்பால்) கி.பாலாஜி 23.02.2021 பகல் 12 மணி இசையாய் பொழிகின்ற காலம்... ஒவ்வொரு துளியாய் என்னுள் உருவாகி வந்த ஸ்வரமே உன்னருள் முழுதும் இசையாய் பொழிகின்ற காலம் வருமோ? (ஒவ்வொரு) கண்களை மூடிக் காலம் காலமாய் தவம் செய்தேன கண்ணிமை திறக்கும் நொடியில் மின்னலாய் வந்தாய் சென்றாய் காரிருள் காட்டில் நானும் கலங்கினேன் மேலும் நடந்தேன் வானில் ஓர் கீற்றாய் வந்த சுவடின்றி மறைந்ததேனோ? (ஒவ்வொரு) உன்னருள் முழுதும் இசையாய் பொழிகின்ற காலம் வருமே உன்னருள் முழுதும் இசையாய் பொழிகின்ற காலம் வருமே புலன்களோ மனதின் பிடியில் புவனமே உந்தன் மடியில் கதிரென நீயும் அங்கே காண்கிறாய் எந்தன் நெஞ்சில் இருளென் றினியொன் றில்லை இனியெலாம் இசை வேறில்லை வருவது முழுதும் வசந்தம் வரங்களால் வளரும் ப்ரபஞ்சம் உன்னருள் முழுதும் இசையாய் பொழிகின்ற காலம் வருமே கி.பாலாஜி 10.12.2020 இரவு 11. மலரே........ மலரே பனியின் துளியில் சிலிர்த்த கதிரே கனவின் அழகில் லயித்த மனமே கனலாய் கனிந்த கனியே அலையே கடலாய் விரிந்த அழகே. (மலரே) வெயிலும் ஒரு நிழலாய் மாறும் வேனலிலும் மேகம் பாடும் கார் காலத்து மின்னல் ஒளியாய் உன் கண் இமைகள் படபடத்தாலே! (மலரே) சிறகுகள் விரித்தங்கு சிந்தனைப் பறவை சீதள மாமொரு மார்கழிப் பூவின் மங்கிய வண்ணச் செவ்விதழ் மேலே மயங்கி உரசியே மனம் களித்தாடும் (மலரே) சித்திரச் சிலையெனச் சேர்ந்திசை பாடும் நித்திரை மறந்தே நின் வசமாகும் நிலவே மயங்கிக் குளிரில் உறையும் நினைவோ காலம் கடந்தே பறக்கும் (மலரே) கி.பாலாஜி 22.12.2020 இரவு 11.30 நலமே சேரும் பேதம் இல்லா ஸ்ருதியுடனே வேதம் வரிகளை இசைக்கிறது வாதம் செய்யும் மனம் இன்று வாகாய் இசையில் லயிக்கிறது மலையைப் பார்த்து மடு ஒன்று மனதில் வலிமை கொள்கிறது மாறும் கணக்குகள் எல்லாமே மனதுக்கு அழகாய் புரிகிறது எங்கே செல்வோம் ஏன் வந்தோம் என்பதை வினவிப் பயனில்லை முன்னில் விரிந்த பாதையிலே சென்றால் துயர்கள் இனி இல்லை நம்புவ தொன்றே நாமறிவோம் நலமே சேரும் முன்செல்வோம் சுமைகள் எல்லாம் சுகமாகும் இமைகள் கனத்தால் வரமாகும் கி.பாலாஜி 28.11.2020 திங்கள் இரவு 7.30 இதய தாகம் ராகம்: சிவரஞ்சனி இதயம் முழுதும் வசந்த மழையில் நனைந்த பின்னாலும் தாகம்... நனைந்த பின்னாலும் தாகம்... (இதயம்) அன்பின் வெள்ளம் உருண்டு புரண்டென் உள்ளில் பொழிந்து வழிந்தே.. சென்ற பின் னாலும் ஏக்கம்... சென்ற பின்னாலும் ஏக்கம்.. (இதயம்) ஒன்றுமில்லாமல் வரண்டதோர் காலம் இருந்ததை நீ யறி வாயோ இதயம் வெந்ததை நீ யறிவாயோ ... திடுமெனத் தோன்றி அளவின்றிப் பொழிந்தால் போதுமென்றோ சொல்லத் தோன்றும் - இது போதும் என்றோ சொல்லத் தோன்றும் (இதயம்) பொழிகின்ற வரையில் பொழிந்தே தீர்த்திடென் மோகங்கள் மாய்ந்தே போகும் அதன் வேகங்கள் அழிந்தே போகும் வடிகின்ற வெள்ளம் வடிந்தே போகும் மீண்டும் வேனல் காலம் ! சக்கரம் என்பது சுழன்றே தீரும் முடிவே தொடக்கம் ஆகும் - அது மறுபடி முடிவினில் தொடங்கும் (இதயம்) கி.பாலாஜி 11.11.2019 இரவு 11.30 இசை தேவதை காதில் பொழியும் கான மழையே கண்கள் எழுதும் கவிதை வரியே மேகரதத்தில் பாயும் கீற்றே மின்னொளி யேநெஞ்சில் கங்கை ஊற்றே வேனல் சூட்டில் வேம்பின் நிழலே வெப்பம் தணிக்கும் தென்றல் காற்றே காவிய வரிகள் பாட முனைந்தேன் ஓவியமே இசை தேவதை யேவா பாலை வனத்தில் பாதம் நடக்கும் போதும் உந்தன் நினைவே துளிர்க்கும் கானல் நீரும் சோலை மரமாய் காட்சி அளிக்கும் உள்ளம் களிக்கும் காலைநேரக் கன்னிக்கதிருனைக் கண்டே இந்தக் கமலம் மலரும் வாழ்வில் என்றும் வற்றாச் சுனையாய் ஊறும் தேனே உள்நின் றொளிர்வாய் கி.பாலாஜி 13.11.2020 விடியல் நேரம் 3 மணி உள்ளே ஒலிக்கும் நம்பிக்கை காலடி ஓசையில் கண்பதித் தேநான் காத்திருந் தேன்பல நாளாய் வசந்தத்தின் பாதையில் மழைத்துளி தேடும் சாதகப் பறவையைப் போலே (காலடி) வீசிய கதிரொளிச் சூட்டில் கரைந்திட்ட பனித்துளிக் கனவறி வாயோ வீசும் தென்றலின் குளிர்ச்சியில் வியர்க்கும் பூக்களின் குறைஅறி வாயோ (காலடி) ஆர்க்கும் அலைகளின் ஓசையில் உறங்கும் ஆயிரம் கதையறி வாயோ போர்க்களம் காணாப் படைக்கலம் போலே புழுங்கும் மனமறி வாயோ (காலடி) உறங்கா மனத்தின் ஒவ்வோ ரசைவும் உன்வர வைநோக்கி நிற்கும் புலரா இரவும் புலரும் என்றொரு புண்ணியக் கணம் வேண்டிக் காக்கும் (காலடி) ஆலயமணியின் ஓசையில் எழும்பும் நாதத்தின் அதிர்வலை எனவே உள்ளே ஒலிக்கும் நம்பிக்கை எனும் ஓரொலி தனைப்பற்றி வாழ்வேன் (காலடி) கி.பாலாஜி 29.12.2020 இரவு 9 மணி அன்னையும் தந்தையும் தானே.,.... உருவாக்கி உயிர் தந்த தாயே உனக்காக நான் என்ன செய்தேன் உள்ளுக்குள் உருகினாய் நீயே - இன்று உன்னுருவை என்நெஞ்சில் சுமந்தேன் ! கழிக்கின்ற கணங்களொவ் வொன்றும் பெற்றோர் கருணையின் பிச்சையா மன்றோ ! கடந்து வந்த காலங்கள் எல்லாம் படங்களாய் முன்னில்நின் றனவே ! தள்ளாத வயதிலும் கூட அன்பைத் தள்ளாமல் தந்தையும் தந்தார் உம்வழியி லிருந்தவை முள்ளே அந்த உண்மைகள் நானறிய வில்லை! நீர்செய்த செயல்களில் எல்லாம் உள்ள குறை மட்டும் என்கண்ணில் படுமே! என் குறையை மகன் கண்டபோதே உம்நிறையை நான் அறிந்து கொண்டேன்! அன்பென்ற ஊன்றுகோல் தன்னை - உம் அன்பான செயல் மூலம் தந்தீர் ! என்புருகி நீர்தேய்ந்த போது - என்னை அறியாமல் நான் நொந்ததுண்டோ? இருக்கின்ற காலங்கள் வரையில் இருப்பின் அருமைகள் அறியா திருப்போம்! இல்லாத காலத்தில் வெறுமை என்னும் வேக்காட்டில் துன்புற்று வாழ்வோம் ! அன்னையும் தந்தையும் மட்டும் வாழ்வில் அழியாத செல்வங்கள் உணர்வோம் உருவாக்கி உயிர் தந்த தெய்வம் உள்ள காலத்தி லேயேம திப்போம் ! இகவாழ்வு எத்தனை காலம் என் றெஎவருமே அறிந்திட மாட்டோம் ! இகசுகம் அளித்திட்ட பெற்றோர் நமக் கினியதோர் நிதியாவ ருணர்வோம்! --கி.பாலாஜி 07.01.2021 மாலை 5.30 முகில் மறைத்த முழுநிலவு..... பாகேஸ்ரீ (எடுப்பு: நிலவே என்னிடம்..) முகிலின் வெளியே முகத்திரை விலக்கிப் பார்க்கும் முழுநிலவே - எழிலே முகத்தை மறைத்தல் அழகாமோ முன்வரு வாய் எந்தன் பேரழகே ! (முகிலின்) மீன் வெட்கும் நீளத்தில் விழி அழகும் எட்பூ வெட்கும் நீளத்தில் நாசியதும் பிறைநில வைப்போல் நெற்றியதும் வெளிர் மூங்கிலைப் போலிரு கையழகும் பசுங்கொடி நாணும் இடையழகும் பார்க்கும் பார்வையில் மின்னொளியும் பேசும் மொழிகிளிக் கொஞ்சலெனத் தோன்றும் அழகே தளிர்க்கொடியே ... முகத்தை மறைத்தல் அழகாமோ முன்வருவாய் எந்தன் பேரழகே ! (முகிலின்) காண்பவரின் கண் பட்டுவிடும் என்றோ கரு மையின் பொட்டொன்று கன்னத்திலே! பூசிய மஞ்சள் பெண்மையைதைப் போற்றும் விதமாய் உலவிடுமோ முகத்தை மறைத்தல் அழகாமோ முன்வருவாய் எந்தன் பேரழகே... முகிலின் வெளியே முகத்திரை விலக்கிப் பார்க்கும் முழு நிலவே... எழிலே........ஒளியே... கி.பாலாஜி 27.02.2021 பகல் 2.45 களம் வேண்டாக் கவிதை ! கண்கள் கவிதை ! கண்கள் சொல்லும் மொழியே கவிதை ! காண்பது கவிதை ! காணச்செய்த வரமும் கவிதை ! சொல்லும் மொழிகள் எல்லாம் கவிதை ! சோகம் மாற்றும் சொற்கள் கவிதை ! எண்ணம் கவிதை ! எண்ணம் காட்டும் வண்ணம் கவிதை ! ஏடுகள் கவிதை ! ஏட்டில் வடித்த வார்த்தை கவிதை ! பாடும் பண்ணும் லயமும் நயமும் பாடப் படுமோர் பொருளும் கவிதை ! தேடும் பொருளும் தேடாப் பொருளும் தேர்ந்திசை பாடும் இசையும் கவிதை ! இன்பம் கவிதை ! இனிமை கவிதை ! துன்பம் கவிதை ! துயரக்கடலின் துளிகள் தோறும் துவளா தியங்கும் துகளும் கவிதை ! தோளில் சுமக்கும் பாரம் வெளியே சொல்ல முடியாச் சுமையாம் கவிதை ! நாளும் கோளும் நலமும் வளமும் நம்மைச் சுற்றிய நயமும் கவிதை ! உலகம் கவிதை ! உலகம் பயந்த உண்மை கவிதை ! ஊற்றே கவிதை ! உள்ளம் பொங்கிப் பெருகும் உணர்வின் துளிகளின் ஒவ்வோ ரணுவும் கவிதை ! கவிதைக் கென்றோர் தினமும் வேண்டாம் ! கவிதை பாடக் களமும் வேண்டாம் ! காண்பதி லெல்லாம் கவிதை கண்டால் கணங்கண மும்நம் வாழ்வே கவிதை ! கி.பாலாஜி 21.03.2022 பகல் 2.45 உலக கவிதை தினம் ! அதே மாலை ! அதே மயக்கம் ! அதே மாலை ! அதே மயக்கம் ! அதே தனிமை ! அன்றைய நினைவு என்றும் இனிமை! அன்றைய தனிமை கசந்தது ; மனதைப் பிசைந்தது. அருகில் நீ இல்லை என்றால் பொன் மாலையும் பூ வாசமும் பொன்றாத நரகம்தான்! இன்றும் நீ இல்லை தான்! ஆனால் அந்த நரகத்தின் நெருடல்கள் இன்று இல்லை ! ஒப்புக் கொள்ளும் மனம் இருந்தால் தவிக்க வைக்கும் தனிமை இல்லை; ஏற்றுக் கொள்ளும் மனம் இருந்தால் என்றும் தனிமை கசப்பதில்லை ! இரு கை நீட்டி வரவேற்றால் வருவது எல்லாம் வசந்தம் தான்! மனதோடு வாழப் பழகி விட்டால் மனம் என்றும் உன் வசம் ; நீயோ அதன் வசம்! நிற்காமல் பெய்யும் மழையில் நிர்மல மனதின் ஓசைகள் ; பேசாமல் பேசும் மனதின் பேச்சுக்கு இல்லை அர்த்தங்கள் ! இயல்பாய் இருந்தால் போதுமே ! இசையா மனமும் இயங்குமே !வீணை அருகே இருந்து விட்டால் விரல்கள் தானே இசைக்குமே! வீணை அருகே இருந்து விட்டால் விரல்கள் தானே இசைக்குமே! --கி. பாலாஜி 08.08.2020 இரவு 8 மணி This is a Transcreation in Tamil, of a Poem in Hindi written by my daughter Saranya Francis என்னுள் நான்.... அகத்தே இருக்கும் சன்னல் ஒன்றை அடைத்து மூடிப் பூட்டிட்டு அகலத் திறந்த கதவின் வழியே புறவுல கைநான் பார்த்திருந்தேன் ! இத்தனை நாளும் இப்படிப் பார்த்தே உறவும் நட்பும் வளர்த்தேன் நான் ! இப்போ தேனோ எனக்குள் சென்று என்னைக் காணவும் விழைகின்றேன்! தன்னைத் தானே விரும்பித் தனது அழகின் கொடையை அறியாமல் அடுத்துள் ளோரின் அழகைத் தேடும் செயலால் அழகும் தெரிந்திடுமோ? என்னை நானே சந்திக் காமல் எந்தன் குறைநிறை அறியாமல் உன்னை நானா யெண்ணிக் கொண்டே உதவும் செயலும் முழுதாமோ? நானிலத் தவர்க்கே நல்லறம் செய்து நற்செயல் பற்றிப் பலபேசி நமக்கென் றுள்ள இல்லதி லேதான் அறத்தை மறத்தல் அழகாமோ? மனிதரில் தெய்வம் பார்த்தா யிற்று மனிதருக் குள்ளும் ஆயிற்று ! மனதின் உள்ளே மதி மறந்தே சென்றே நானினி பார்ப்பேனே ! அந்திமக் காலம் அதனை எண்ணிப் பயந்தே வாழ்ந்ததும் ஆயிற்று ! அந்தம் இல்லா ஒன்றோ டினிதே அதுவா யாகிட முயல்வேனே ! இனிமேல் என்னுள் நான் வாழ்வேன் இதயம் திறந்து உள்செல்வேன் கண்ணைத் திறந்தே பார்த்ததை யெல்லாம் என்னுள் தேடிப் பார்ப்பேன் நான்! கி.பாலாஜி 17.07.2021 மாலை 6 Original lines in Hindi ,written by my daughter Saranya Francis. दुनिया से बहुत मिल चुके , खुद से मिलने कि चाहत है अजनबियों से प्यार बहुत कर चुके अब खुद से मोहब्बत कि चाहत है बुलंदियों से नाता कुछ ज्यादा ही जुड़ गया अब खुद से एक रिश्ते कि चाहत है इन्सान और ईमान को जी जान से परख लिया अब खुद को परखने कि चाहत दूसरों के इच्छाओं के बंधी बन अब बहुत वक़्त गवा चुके अपने ही सरहदों से आजाद होकर अब खुद के साथ वक़्त बिताने कि चाहत है बाहरी आशा निराशाओं में बहुत गहरे डूब चुके अब खुद के आशाओं में डूब उभरने कि चाहत है अलग अलग लोगों के उम्मीदों को कायम कर बहुत जी चुके अब खूद से खुद के उम्मीदों को सच्चाई में बदलने कि चाहत है खोद खोद के असतित्व को बहुत इनाम पा चुके तराश्कर अपने आप को अब खुद के खोज कि चाहत है इंसानों के महानों के भगवान् को बहुत जान लिया नाम और धर्म रहित खुद में बसे उस भगवान् को पाने की चाहत है अंत के निश्चित सत्य से डर डर कर बहुत जी चुके अंत से परे खुद में छिपे उस अनंत को पाने कि अब चाहत है!! --SARANYA FRANCIS மஞ்சள் மங்கை! (Zoom இசைக் குடும்பம் குழுவில் வைத்த படத்திற்கான கவிதை போட்டிக்காக எழுதியது. இரண்டாம் பரிசு பெற்றது) மஞ்சள் மலர்களே! மனதின் பலங்களே! மங்கல உணர்வினை விளை விக்கும் விதைகளே ! மாலையின் கதிரினில் ஒளிர்ந்திடும் முகங்களில் சிந்திடும் புன்னகைச் சுடரென நின்றிடும் சுந்தரத் தமிழே சுகம் அருள் எழிலே ! மந்திரப் பொருளே! மங்கையின் வடிவே! மஞ்சளின் பசுமையில் மலர்ந்திடும் கனலே ! அன்பெனும் அருளாய் அகமெலாம் நிறைவாய்! ஆதர வென்பதை அள்ளிநீ தருவாய், இகசுகம் ஈந்திடும் இனிமையே இதமே! உண்மையின் உருவே! ஊக்கத்தின் தருவே! இசையால் எங்களை இணைந்திடச் செய்தாய்! ஏந்திழை தமிழே ஏற்றங்கள் அருளாய் ! என்றும் உன் மஞ்சள் மலரடி பணிந்தோம் ! ஏழிசை தேவி இன்னருள் புரியாய் ! கி.பாலாஜி 05.07.2022 இரவு 8.00 மணி மலைச்சரிவில் மயக்கம் மலையோரச் சரிவினிலே மாஞ்சோலை ஒன்றுண்டு; மாஞ்சோலைக் குயிலதனின் குரலினிலே தேனுண்டு; தேன் உண்ட வண்டொன்று மயங்கித்தான் உறங்கிடுமே ! உறக்கத்தில் கனவொன்றின் சிரிப்பினிலே சிலிர்த்த்திடுமே! சிரிப்பதனின் அழகினிலே மலரொன்றும் மயங்கிடுமே! மயங்கிடுமந் நேரத்திலே தென்றலதும் வீசிடுமே! வீசியதோர் காற்றதனில் காந்தர்வச் சலங்கையொலி சங்கீதம் பாடிடுமே சல்லாபம் கூட்டிடுமே ! சிங்காரச் சலங்கையதன் செவ்வாழைக் காலிரண்டு ஒய்யார நடை நடந்து ஒசிந்தே தான் வந்திடுமே! வந்து நின்ற, வாழையதன் தண்டைப்போல் கால்களுடைச் சித்திரத்தின் பாவையதும் செவ்வானம் போல் சிரிக்கச் சுற்றியெங்கும் பூ மணக்கச் சொர்க்கம்தான் தோன்றிடுமே! கி.பாலாஜி 24.07.2022 பகல் 2.45 மனமே ! மனமே ! மனமே மனமே பறந்தனையோ மன்றத்தை விட்டே அகன்றனையோ மாயா உலகொன்று படைத்திருந்தாய் மறந்தே பறந்தே சென்றதும் ஏன் ? கண்மணி போல் உன்னைக் காத்துவந்தேன் காணாத நாட்களைக் கனவில் தந்தாய் கழித்தவோர் கனங்கள் காணா தாயின கனவுகள் எல்லாம் களவே போயின ! சென்றது இனியென்றும் மீளாதென்பது சிந்தைக்கு ஒவ்வா தாயினவே வந்தவை எல்லாம் வரவில் வைத்தேன்-இன்று வார்த்தைகள் இல்லா தாயினவே! பசித்தவன் நானும் புசித்திட மறந்தால் பந்தியில் அமர்ந்தே பயனுண்டோ பாதையின் மரங்களில் குயில்கள் உண்டே கூவிட அவையும் மறந்திடுமோ? மனமே விரைவில் திரும்பிடுவாய் மாற்றங்கள் பலவும் தந்திடுவாய் நம்பிடும் கணங்களின் பாதையிலே நானுந்தன் வரவைப் பார்த்திருப்பேன் மனமே மனமே திரும்பிடுவாய் மலரென மலர்ந்தே சிரித்திடுவாய் சிந்தனை வானம் களிப்பினிலே சிவந்திடச் செய்தே சிலிர்த்திடுவாய் ! கி.பாலாஜி 29.07.2022 இரவு 10.30 எங்கும் தங்கும் இசை பச்சை மலைகளின் சரிவுகளே நீர் பாடும் பாடலின் பொருள் என்ன ஆழ்ந்தே இறங்கும் அருவியின் நீரின் இரைச்சல் பாடும் இசை என்ன மலர்கள் அசைந்து சிரிக்கிறதே மறைபொருள் ஏதும் அதில் உண்டோ மாலைத் தென்றல் வீசும் வீச்சில் மறைந்தே நிற்கும் பொருள் உண்டோ? இருட்டின் கருமை அதற்கும் கூட இன்னேதேனும் பொருள் உண்டோ காலைக் கதிரின் ஒளியினில் உருகும் பனித்துளி அசைவில் பொருள் உண்டோ இயற்கை தருகிற ஒவ்வோ ரசைவுக்கும் இசையென் பதுவே பொருளாகும் இங்கங் கென்றே சொல்லவொணாமல் எங்கும் ஒலிப்பது இசையாகும் இசையை எதிலும் காணும் மனமே இயல்பாய் இயங்கும் மனமாகும் இன்னிசை ஒன்றே இயந்திரம் தனிலும் இலங்கும் மந்திரப் பொருளாகும் இசையைப் புரிந்தே இயல்பாவோம் இயல்பாய் இருந்து இசையாவோம் இன்பங்கள் ஒன்றே வரவாகும் இனிவரும் காலம் மகிழ்வாகும்! கி.பாலாஜி 29.07.2022 இரவு 11.30 அருகே உன் அருகே….. அருகே உன் அருகே KB அருகே உன் அருகே ஒரு தென்றலாய் நான் மாறி வருவேன் வருவேன் உன் அருகே ஒரு நாளில் (அருகே) நிலவே நிலவே நீ ஏனோ மறைகின்றாய் மலரே மலரே தலை சாய்த்தேன் சிரிக்கின்றாய் மனதில் உன் மனதில் வரும் நினைவே தான் என்ன தினமும் நீ காணும் இன்பக் கனவில் நான் உண்டோ (அருகே) பொழுதே இளம் பொழுதே நீ நீளா திருந்து விடு அழகை இந்த அழகை என்றும் என்னோ டிருக்க விடு மாலை அந்தி மாலைச் செவ்வானே நிலைத்து விடு காலை அதிகாலை வரும் கனவில் என்னை லயிக்க விடு (அருகே) கி.பாலாஜி 31.07.2022 இரவு 10.30 மேகங்கள் உருண்டு திரண்டு வரும் மழை மேகங்கள், ஒரு நொடியினிலே தம்மை உருக்கி, உலகின் தாகம் தணிய வைக்க 'மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப் போதரு'கின்றதோர் புண்ணியக் காட்சி ! கி.பாலாஜி 07.08.2022 மனதில் மட்டும்... என்மேல் உனக்கு இல்லை காதல் என்றே அறிந்தேன் கவிஞன் ஆனேன் ! கற்பனை யில்உன் கண்கள் காட்டிய அழகை எல்லாம் எழுத்தில் வடித்தேன்! கால்கள் வைத்த பாதச் சுவடுகள் தன்னில் கூடக் கலைநயம் கண்டேன்! நத்தையில் பிறக்கும் நல்லொளி முத்துன் புன்சிரிப் பினிலே பொலியக் கண்டேன்! விரல்கள் ஐந்தும் வெற்றிலைக் கொழுந்து! விண்மீன் சிரிக்கும் விழிகள் அசைந்தால்! வெண்ணில வஞ்சும் தண்ணிறை மேனி ! கண்ணிமை திறந்தால் கலிகள் ஓடும் ! கார்முடி யழகைக் கண்டதும் மேகம் காணா தெங்கோ கடலில் மறையும்! பஞ்சுக் கிணையாய் பறவைச் சிறகாய் பாதம் மென்மை! பணிவோ இனிமை! பார்வை பேசும் மொழியில் புதுமை! பனிபோல் விழிநிறை மயக்கம் புதுமை! படபட வென்றே துடிக்கும் இமைகள் புகட்டும் பாடம் பலவும் புதுமை! அனைத்தும் கண்டு அறிவில் தெளிவு! மனதில் காதல் மட்டும் முறிவு! கி.பாலாஜி 29.02.2020 கனவே கனவே ... காணாமல் போகின்றாய் கனவே கனவே ! கண்ணுக்குள் வைத்துன்னைக் காத்தேன் கயலே! எண்ணத்தை என்றும் நீ நிறைத்தாய் மயிலே ஏக்கம் ஏன் அறியாமல் போனாய் குயிலே (காணாமல்) இலவொன்றைக் காத்து நிற்கும் கிளியானேனோ ? இதயத்தின் துடிப்பதனை உணராய் நீயும் ! இருநிலவின் ஒளிபரவும் இனிதோர் முகமும் என்நிழலைக் கண்டாலும் இருளுவ தேனோ? ஒரு மாற்றும் குறையாதோர் திருப்பொன் முகத்தில் ஒருவட்டக் கரும்பொட்டா யெனுமாவேனோ? ஒருநாளும் தேயாதோர் முழுநில வுன்னை ஓரத்தே இருந்தேனும் பார்த்துநிற் பேனோ? கி.பாலாஜி 07.08.2022 மாலை 3.15 வண்ணக்கனவு இரவுக்கும் பலப்பல வண்ணம் தந்தாயே உந்தன் வரவால்! எண்ணத்தின் கிண்ணம் தன்னை நிறைத்தாயே உந்தன் நினைவால்! உறவுக்கும் புதுப்புது அர்த்தம் தருவாயோ கண்ணே நீயும்! உரிமை ஒன் றுண்டே என்னும் நினைப்பாலே கேட்கின் றேன்நான் பௌர்ணமியின் ஒளிநீ முகத்தில் கொண்டதினால் தானோ வானம் கருநீலப் புடவை போர்த்திக் கருத்தோடே சிரித்தது இன்று! சிந்தனையாம் நட்சத் திரத்தின் ஒளியாலே சிவந்தது கன்னம்! அந்தியிலே மலரும் அல்லி மணமேனோ கூடிய தின்னும்! ஒருமுறைநீ முகத்தைப் பார்த்துச் சிரித்தாலேபோதும் என்னை ஓராயிரம் மின்னல் கொடிகள் தாக்கிடுமே என்செய் வேன்நான்! கண்ணிமைகள் திறப்பா யென்றே காலமெல்லாம் காத்திருந்தேனே கனவெல்லாம் கண்ணின் மைபோல் கரையாமல் நின்றிடுமோ சொல் ! கி.பாலாஜி 10.08.2022 மாலை 6.30 வாழ்க பாரதம் ! ராகம்: மோஹனம் வாழ்க பாரதம் ! வாழ்க பாரதம் ! வாட்டங்க ளின்றி வளர்ந்திடுக! தாழ்வுகள் தடைகள் ஏதும் இன்றித் தன்னிறை வடைந்தே நலம் பெறுக ! (வாழ்க) நாடு நமக்கென் செய்தது என்று நாளும் எண்ணி ஏங்கி டாமல் நாமென்ன செய்தோம் நாட்டுக்கு என்றே எண்ணிப் பார்த்துச் செயல் புரிவோம் ! திட்டங்கள் தீட்டி நட்டங்கள் கடந்தே நாட்டைமுன் னேற்றப் பாதையிலே நடத்திச் சென்றே நலம் பல புரிந்த நல்லோர் செயல்களைப் போற்றிடுவோம்! (வாழ்க) பல்லுயிர் களையும் படைத்தோர் இயற்கை பல்வளங் களையும் அளித்ததுவே! இயற்கை தந்த கொடையினை என்றும் போற்றி வளர்த்தே பணிபுரிவோம் ! நேர்மை என்னும் நல்வழி தன்னில் நாமும் நடந்தே சென்றிடுவோம்! பாரினில் என்றும் பாரதம் முன்னணி தன்னில் நின்றிடப் பணிபுரிவோம்! (வாழ்க) தொழில்முன் னேற்றம் அடைவோம் நாமே ! தோல்வி களைநாம் கண்டஞ் சோம் ! எழிலுறு பாரதம் அதனின் எழிலை இன்னும் மிகையுறச் செய்திடுவோம்! வாழ்ந்திடும் ஒவ்வொரு மனிதனின் உழைப்பும் தாய்த்திரு நாட்டின் நலம் கூட்டும்! ஒற்றுமை யாய்நாம் ஒன்றாய் நின்றே உழைப்பின் பெருமை உயர்த்திடுவோம்! வாழ்க பாரதம் வாழ்க பாரதம் வாழ்க வாழ்க வாழியவே ! கி.பாலாஜி 15.08.2022 காலை 11.30 தமிழ்க்கொடி இன்னும் எத்தனை நாள் தான் கனவில் இடர் தரும் தொடராய் வருவாயோ ? பொன்னும் மணியும் பூண்டே நிற்கும் பூந்தளிர்க் கொடியே அணைவாயோ? மன்னிய செல்வம் மண்பொன் இன்னும் மற்றெதும் வேண்டேன் இனி நானே ! மாறாப் பொலிவுடன் திகழும் திருமுக நகைதனைக் காட்டிடு வாய்மானே ! அன்னத்தின் சிறகைப் போலே காற்றில் அழகாய் பறந்தே திரிகின்றாய் ! தழுவிய துகிலில் நழுவிடும் எழிலே தளிர்க்கொடியே நேர் வருவாயே ! மங்கலமே மனக் காவினிலே இதழ் ஆயிரம் விரிக்கும் மோகனமே ! எங்கணும் இசையாய் பொங்கிடு தமிழே எழிற்பாவே பதம் பணிந்தேனே ! கி.பாலாஜி 17.08.2022 மாலை 4.45 பந்தலாய் பரவி நிற்கின்றாய் பசுமையை எங்கும் நிறைக்கின்றாய் வேனலின் வெம்மை தணிக்கின்றாய் வேர்தனைப் படர்த்தி வளர்க்கின்றாய் தருநிழல் தேடி வருவோரின் பெருமனத் தயற்சி தவிர்க்கின்றாய் அருமையாய் வளர்ந்து நிற்கின்றாய் அன்பினைத் தந்து மகிழ்கின்றேன் வன்கொடும் பாலை போலன்றி வளம் தரும் மருத நிலத்தானாய் செந்தளிர் மலர்கள் சொரிகின்றாய் வந்துனை வாழ்த்தி வணங்கினமே! கி.பாலாஜி 18.08.2022 பகல் 1.45 மலர் கின்றன மலர்களே மலர்ந்து உதிர்ந்து சருகா கிடவே மலர் கின்றன மலர்களே மலர் கின்றன மனங்களே இணைந்து மகிழ்ந்து பிரிந்தே கிடவே மலர் கின்றன மனங்களே நா ளையென்றபொழுதினில் நா மிருந்துமகிழ்வமோ வே ளைவந்த பொழுதினில் வேண்டிநின் றால் வாழ்வமோ வஸந்த காலம் இருக்கும் வரையில் வாழ்ந்து நாமும் களிப்பமே! (மலர் கின்றன) வா னமே கூரையாய் மே தினி வீடெனெ வாழ் கின்ற மனிதரே வாழ்வினில் உறவென என்று மென்றும் ஒன்று கூடிக் களித்துக் குலவி ஆடுவோம் (மலர் கின்றன) கோ டையில் மழைவரும் ஒரு கோ டியாய் சுகம்தரும் வா டையினில் வெயில்வரும் வாழ்வினில் இதம்தரும் நாடிவந்த தனைத்தும் போற்றி நாமும் மகிழ்ந்து வாழுவோம் (மலர் கின்றன) கி.பாலாஜி 18.05.2022 காலை 11.45 அத்தை என்றால் அன்னை ராகம் : மோகனம் https://voca.ro/16E26KeRF4s0 தாய்மை எனுமோர் உணர்வை உணவாய் ஈந்த தாயே தந்தையின் சோதரி ஆனாய் தாயாய் எனைநீ வளர்த்தாய் பள்ளிப் படிப்புகள் தாண்டிப் பண்புகள் தமைப்படிப் பித்தாய் எள்ளத் தனையும் அன்பில் குறை நீ வைத்தது மில்லை ஏடுகள் தரமுடி யாதோர் படிப்பினை யெல்லாம் தந்தாய் என்றும் என்னுள் நிலைத்தே எனைநீ நடத்துகின் றாயே ! (தாய்மை) மோகன ராகம் தனையே முதலில் அறிமுகம் செய்தாய் முதல் உணவாக என்றும் இறையுணர் வைநீ வைத்தாய் ஊரும் உறவும் நீயாய் மாத்திரம் உள்ளத்தில் அமர்ந்தாய் ஒவ்வோர் கணமும் உனையே பின்னிப் பிணயுமென் நினைவே (தாய்மை) கி.பாலாஜி 17.04.2022 காலை 8.30 உன்னை நீயே மறப்பதிலே ஸுகமுண்டோ தன்னதெலாம் துறப்பதிலோர் அழகுண்டோ (உன்னை) பாடுவதை குயிலும் கூட மறந்திடுமோ காற்றில் பறத்தல் காற்றாடி மறந்திடுமோ மீனும் நீந்த மறக்குமோ வண்டு பூவை மறக்குமோ மேகம்கண்ட மயிலாடா திருக்குமோ (உன்னை) காற்றுதனது வீசும் தன்மை மறந்திடுமோ... வெண்மேகம் நகராமல் நின்றிடுமோ நட்சத்திரம் மின்னாதோ மின்னல் ஒளிவீசாதோ நதியும் கடலின் நட்பை மறப்பதோ ? (உன்னை) கி.பாலாஜி 12.06.22 1.30 AM ‘நின்ன நீனு மறதரேனு’ என்ற கன்னடப் பாடலின் மொழிபெயர்ப்பு, அதே மெட்டில் [ ஊமையின் கனவு அன்று கண்ட கனவுகட் கெல்லாம் அர்த்தம் உண்டென்று இன்று புரிந்தது வே ஆனால் எண்ணிப் பயன் உண்டோ – கண்ணே எண்ணிப் பயன் உண்டோ? (அன்று) அன்று கனவில் ஆம்பல் மலராய் நின்று பூத்திருந் தாய் அழகு நிலவின் நிழலாய் மடிமேல் வந்து வீழ்ந்திருந்தாய் கைக்கு எட்டும் தூரத்தில் இருந்தும் வாய்க்கு எட் டாமல் போன பழத்தின் சுவையை எண்ணி வாடும் மனம் இங்கே ... வழங்கும் அழகு எங்கே? (அன்று) அன்று பாடிய ராகங்கட் கெல்லாம் வரிகள் நீ யானாய் அழகு நிலவொளி வீசும் முகமாய் கனவின் பொருள் ஆனாய் அன்றும் இன்றும் கனவாய் மட்டும் நிறைந்த பொன் னழகே என்றும் என்றும் எனக்குள் மட்டும் ஒளிரும் கதிர் விளக்கே ! ஊறும் உன் நினைவே ... (அன்று) கி.பாலாஜி 27.05.2021 பகல் 2.45 மஞ்சள் மங்கை! மஞ்சள் மலர்களே மனதின் பலங்களே மங்கல உணர்வினை விளைவிக்கும் விதைகளே ! மாலையின் கதிரினில் ஒளிர்ந்திடும் முகங்களில் சிந்திடும் புன்னகைச் சுடரென நின்றிடும் சுந்தரத் தமிழே சுகம் அருள் எழிலே ! மந்திரப் பொருளே! மங்கையின் வடிவே! மஞ்சளின் பசுமையில் மலர்ந்திடும் கனலே ! அன்பெனும் அருளாய் அகமெலாம் நிறைவாய்! ஆதர வென்பதை அள்ளியே தருவாய், இகசுகம் ஈந்திடும் இனிமையே இதமே! உண்மையின் உருவே! ஊற்றெனப் பெருகியே எங்களை இசையால் இணைந்திடச் செய்தாய்! ஏந்திழை தமிழே ஏற்றங்கள் அருளாய் ! என்றும் உன் மஞ்சள் மலரடி பணிந்தோம் ! கி.பாலாஜி 05.07.2022 இரவு 8.00 மணி களம் வேண்டாக் கவிதை ! கண்கள் கவிதை ! கண்கள் சொல்லும் மொழியே கவிதை ! காண்பது கவிதை ! காணச்செய்த வரமும் கவிதை ! சொல்லும் மொழிகள் எல்லாம் கவிதை ! சோகம் மாற்றும் சொற்கள் கவிதை ! எண்ணம் கவிதை ! எண்ணம் காட்டும் வண்ணம் கவிதை ! ஏடுகள் கவிதை ! ஏட்டில் வடித்த வார்த்தை கவிதை ! பாடும் பண்ணும் லயமும் நயமும் பாடப் படுமோர் பொருளும் கவிதை ! தேடும் பொருளும் தேடாப் பொருளும் தேர்ந்திசை பாடும் இசையும் கவிதை ! இன்பம் கவிதை ! இனிமை கவிதை ! துன்பம் கவிதை ! துயரக்கடலின் துளிகள் தோறும் துவளா தியங்கும் துகளும் கவிதை ! தோளில் சுமக்கும் பாரம் வெளியே சொல்ல முடியாச் சுமையாம் கவிதை ! நாளும் கோளும் நலமும் வளமும் நம்மைச் சுற்றிய நயமும் கவிதை ! உலகம் கவிதை ! உலகம் பயந்த உண்மை கவிதை ! ஊற்றே கவிதை ! உள்ளம் பொங்கிப் பெருகும் உணர்வின் துளிகளின் ஒவ்வோ ரணுவும் கவிதை ! கவிதைக் கென்றோர் தினமும் வேண்டாம் ! கவிதை பாடக் களமும் வேண்டாம் ! காண்பதி லெல்லாம் கவிதை கண்டால் கணங்கண மும்நம் வாழ்வே கவிதை ! கி.பாலாஜி 21.03.2022 பகல் 2.45 உலக கவிதை தினம் ! https://youtu.be/kJA8AMhFYjQ முகில் மறைத்த முழுநிலவு..... ஹிந்தோளம் முகிலின் வெளியே முகத்திரை விலக்கிப் பார்க்கும் முழுநிலவே – எழிலே முகத்தை மறைத்தல் அழகாமோ முன்வரு வாய் எந்தன் பேரழகே ! (முகிலின்) மீன் வெட்கும் நீளத்தில் விழி அழகும் எட்பூ வெட்கும் நீளத்தில் நாசியதும் பிறைநில வைப்போல் நெற்றியதும் வெளிர் மூங்கிலைப் போலிரு கையழகும் பசுங்கொடி நாணும் இடையழகும் பார்க்கும் பார்வையில் மின்னொளியும் பேசும் மொழிகிளிக் கொஞ்சலெனத் தோன்றும் அழகே தளிர்க்கொடியே ... முகத்தை மறைத்தல் அழகாமோ முன்வருவாய் எந்தன் பேரழகே ! (முகிலின்) காண்பவரின் கண் பட்டுவிடும் என்றோ கரு மையின் பொட்டொன்று கன்னத்திலே! பூசிய மஞ்சள் பெண்மையைதைப் போற்றும் விதமாய் உலவிடுமோ முகத்தை மறைத்தல் அழகாமோ முன்வருவாய் எந்தன் பேரழகே... முகிலின் வெளியே முகத்திரை விலக்கிப் பார்க்கும் முழு நிலவே... எழிலே........ஒளியே... கி.பாலாஜி 27.02.2021 பகல் 2.45 அன்னமும் நாணுதே !
'அன்னமே உந்தன் நடையைக் கண்டதும் நாணும் அந்த அன்னத்தின் நிலையைப் பாராய் ஆருயிர் மானே அன்பே' என்றுதான் ராமன் சொல்லி இன்னகை புரியும் நேரம், இனியவள் இன்னோர் புறத்தில் வாவியில் நீரை அருந்தி வனத்தினுள் செல்லும் அந்த ஆனையின் திமிர்ந்த நடையைக் கண்டதும் முறுவல் பூத்தாள் கணவனால் கர்வம் கொண்டாள் ! அண்ணலின் ஆண்மை பொங்கும் நடைதனக் கீடா மோவென் றையுறும் எண்ணத்தோடே அன்னமும் முன்னே சென்றாள் ! அகத்திலே நாணம் கொண்டாள்! அடவியின் மடுவும் மலர்கள் நிறைந்தவோர் சோலை அதுவும் ஆதிரை நிலவும் கூட அவர்களின் காதல் பொங்கும் பார்வையைக் கண்டே தாமும் களிப்பினில் மிதந்து நிற்கக் கானகம் சிலிர்த்ததாமே ! ககனமே மலர்ந்த தாமே ! கி.பாலாஜி 19.09.2022 இரவு 7.15 தாமரை ஏந்திய தாமரை ! ----------------------------- தாமரை ஏந்திய தாமரை ஒன்று தளிர்க்கொடி நாணிட நிற்கிறது! தடத்தினில் வில்லை ஏந்திய நாதன் மொழிந்ததும் முறுவல் பூக்கிறது! 'அடுத்தோர் அன்னம் நின் நடை கண்டே நாணித் தலையும் குனிகிறதே' என்றே நாதன் சொல்வது கேட்டு சுந்தரப் பூ முகம் மலர்கிறது! ஆங்கோர் ஆனை வாவியில் தாகம் தணித்தபின் நடந்தே செல்கிறது ! வில்லம் பேந்திய வீரகம் பீரம் கண்டே வெதும்பிப் போகிறது! மென்னகை பூக்கும் மெல்லிய மலர்கள் மங்கையின் பாதம் காண்கிறது! மானவள் தன்மையும் மென்மையும் மணமும் மலர்நமக் கிலையென ஏங்கியது ! கி.பாலாஜி 23.09.2022 இரவு 9.30 காற்றில்எழுது ! காற்றுக்கு நீ வைத்த பெயர் தான் என்ன காற்றினிலே அதை எழுதிவிடு காற்றின் அழகு தேவதையே ! கைகள் கூப்பி வணங்குகிறோம் (காற்றுக்கு) யாருக்காகக் குயிலே கூவுகிறாய் நீயும் தெரிந்தால் பெயரை நீ சொல்லிவிடு குரலால் கவி எழுதும் குயிலே உனக்கு கோடி கோடி வணக்கம் சொன்னோம் நாம் (காற்றுக்கு) காலைக் கதிர்மரக் கிளைகளின் இடையே வீழ்ந்தே கைகளைத் தழுவியதே கதிரொளி கீழே குதித்தே சிரித்தே வாருங்கள் என்றே சொல்லியதே காலை முதல் மாலை வரை வசந்தம் இங்கே வனப்பினை அள்ளி வீசியதே (காற்றுக்கு) ஓடும் நதியும் சலசலவென்று போகும் பாதை மறந்ததே ஒருக்களித்துப் படுக்கும்பெண்ணைப் போலேகிடந்து ஒளிர்ந்ததே - இந்த வனத்தழகும் மனத்தினையே நிறைத்திங்கு நின்றதே (காற்றுக்கு) கி.பாலாஜி 21.09.2022 மாலை 3.45 An almost translation of the Hindi Song "hawawon pe likh do" from The film 'do doni char' காற்றின் பெருமைதனைக் காற்று மட்டுமே, அறியும் தெரிந்து கொள் கண்ணே! பறக்கும் குயிலதுவும் பாடும் ராகத்தின் பெயரும் தெரியுமோ கண்ணே ! கானம் கவிதை எனக் கருத்தை மயக்கிடுதே கைகள் கூப்பிடுவோம் கண்ணே! கிளைக ளிடையிலே வெயிலின் ஒளி வரும் கைகள் தழுவிடும் இதமாய் ! மாலை மயக்கமும் மனதைத் தழுவிடும் மாயம் பலவுமே புரியும்! இயற்கை தரும் பல வரங்கள் கண்டு நாம் கரங்கள் கூப்புவோம் கண்ணே ! அருவி வீழ்ந்திடும் நதிகள் பாய்ந்திடும் அழகும் இயற்கையின் வரமே ! அனைத்தும் அன்னையின் கொடைகள் வேறில்லை அனு பவித்துநாம் மகிழ்வோம் ! கி.பாலாஜி 24.09.2022 பகல்2 மணி A Transcreation of the Hindi Song "hawawon pe likh do" from the Film 'do doni chaar)

Comments