Posts

நிலாக்கிண்ணம் - கவிதைகள்

Image
நிலாக்கிண்ணம் - கவிதைகள்/பாடல்கள் இலவு காத்து நிற்பதுவோ? சிந்தனையை சில் வண்டாய் மொய்க்கின்ற வரிகள் சிந்தாமல் சிதறாமல் அள்ளிடுமோ கரங்கள் பாராமல் பார்க்கின்ற பங்கயம் போல் விழிகள் பதறாமல் ஏந்திடவே துடிக்கின்ற விரல்கள் பாலாற்றில் தேன் பொழியும் பார்வையதன் தவிப்பில் பகல்நேரக் கனவாகக் கழிகின்ற கணங்கள் பனி வாடைக் காற்றதனின் குளிர்கூடக் கனலும் பாதைமர நிழல்கூடத் தணலாக தகிக்கும் முன் பனியில் முற்றத்து முல்லைப்பூ மணமும் முள்ளாக மனம்தைத்து மூச்சில்விஷம் ஏற்றும் இத்தனை நாள் காத்திருந்து இன்பம் எல்லாம் இழந்தும் இன்னும் ஓர் வேனல்மழைக் கேனோமன ஏக்கம் இலவு காத்து நிற்பதிலே இன்னும் ஏன் மோகம் இல்லாத வழிதேடிச் செல்லுவதோ விவேகம் கி.பாலாஜி 21.11.2021 இரவு 10.30 கண்ணோடு கண் பேசும் காதல் கதை கண்ணோடு கண் பேசும் காதல் கதை - கண்ணில் விண்மீன்கள் பாய்ச்சும் மின்சாரக் கதை எண்ணத்தில் உருவான வண்ணத் தினை எதிர்பாராமல் எனைச் சேர்ந்த இன்பச் சுனை (கண்ணோடு) மான் போன்ற விழியொன்று மொழி பேசுதே மனம் போகும் போக்கேனோ தடுமாறுதே தினம் காணும் காட்சிக்கின் றொளி கூடுதே திசையெங்கும் வண்ணங்கள் விளையாடுதே